ஞாயிற்றுக்கிழமை (மே 10) மதர்ஸ் டே அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் பலர் தங்கள் அம்மாவுடன் எடுத்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் விக்கேஷ் சிவன் தன் அம்மாவைப் பற்றி ஒரு பதிவை ஷேர் செய்தார். அதன்பிறகு அவரது அன்புக்குரிய நயன்தாராவின் அழகான புகைப்படத்தை வெளியிட்டு கவித்துவமான கேப்ஷனுடன் வாழ்த்தினை தெரிவித்தார். அதாவது என் வருங்கால குழந்தைகளின் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார் விக்னேஷ்.
நானும் ரெளடிதான் படத்தின் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு அறிமுகமானார். படம் வெற்றியடைந்தபிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேச மனம் ஒருமித்தவர்களானார்கள். ஆனால் தங்களுடைய உறவுநிலை பற்றி வெளிப்படையாக இதுவரை அவர்கள் கூறியதில்லை.
வெளிநாட்டுப் பயணங்களில் உள்ளூர் கோவில்களில் என இருவரும் சேர்ந்து எடுக்கும் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் அடிக்கடி வைரலாகும். நேரடியாக இல்லை என்றாலும் தங்களின் காதலைப் பற்றி சூசகமாக அவர் தெரிவிக்கத் தவறுவதில்லை. தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடன் காணப்படுகிறார். விக்னேஷ் சிவன் குறும்புத்தனமாக இந்தக் குழந்தையின் அம்மாவுக்கும், என்னுடைய வருங்காலக் குழந்தைகளின் அம்மாவுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என காதல் ததும்பப் பதிவிட்டிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வைரல் ஆகி வருகின்றது. லாக்டவுனுக்குப் பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கவிருக்கிறார் விக்னேஷ் சிவன். நானும் ரெளடிதான் படத்துக்குப் பிறகு நயனை அவர் இயக்கவிருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது.