அப்பாவாகப்போகும் இயக்குனர் அட்லி.. வாழ்த்து கூறி பதிவிட்ட விக்னேஷ் சிவன்! வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி.

Advertising
>
Advertising

Also Read | தனி விமானத்தில் ரஜினியுடன் செல்ஃபி எடுத்த A.R. ரஹ்மான்.. கூட இவங்க வேற இருக்காங்க 😍

  ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லிக்கு ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.

தற்போது ஷாருக்கான் நடிக்கும்"ஜவான் " படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி  தயாரிப்பாளராகவும் அட்லி வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் முனைப்பிலும் ஒரு தயாரிப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.

இயக்குனர் அட்லி, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது.
இந்த தம்பதி தங்களது வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்லவிருக்கின்றனர். இயக்குனர் அட்லி மற்றும் பிரியா அட்லி இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக பிரத்யேக ஃபோட்டோ ஷூட் நடத்தி அறிவித்துள்ளனர்.

 

 

"சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு  இருக்கிறோம். " என அட்லி & பிரியா அட்லி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த பதிவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, "பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது. எப்பொழுதும் பரிபூரண ஆசிர்வாதத்துடன் இருங்கள்" என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

Also Read | CONNECT பட டிரெய்லரை பார்த்து ஜான்வி கபூர் சொன்ன விஷயம்.. பதிலளித்த விக்னேஷ் சிவன்!

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Wishes Atlee and Priya for Pregnancy

People looking for online information on Atlee, Atlee and Priya for Pregnancy, Atlee Priya, Vignesh shivan will find this news story useful.