கையில் குழந்தையுடன் நயன்தாரா 😍 நெகிழ்ச்சி பெயின்ட்டிங்கை பகிர்ந்த விக்னேஷ் சிவன்! VIRAL PHOTO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

Advertising
>
Advertising

Also Read | நயனுக்கு சொல்லிக் கொடுத்த விக்கி..😍 வைரலாகும் 'நானும் ரவுடி தான்' BTS வீடியோ

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர்.

சில வாரங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த பதிவை விரும்பினர். மேலும் பலர் அந்த பதிவில் நயன்தாரா & விக்னேஷ் சிவனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நயன்தாரா & விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்களது இரட்டை குழந்தைகளை கையில் ஏந்தி நிற்கும் ஓவியத்தையும், நயன்தாரா குழந்தைகளை கொஞ்சும் ஓவியத்தையும் பகிர்ந்துள்ளார்.

 

Also Read | தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு'.. தமிழ், தெலுங்கு ஐரோப்பிய உரிமம் குறித்து வெளியான தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Shared Paintings of Nayanthara with Twin Babies

People looking for online information on Nayanthara, Nayanthara and His Twin Baby Boys, Vignesh shivan, Vignesh Shivan Nayanthara will find this news story useful.