"நீ என் உலக அழகியே.." உருகிய விக்னேஷ் சிவன்..ஸ்பெயின் நகர வீதிகளில் நடிகை நயன்தாரா போட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா ஸ்பெயின் நாட்டின் வேலன்சினா நகர வீதிகளில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | மாஸ்.. "பொன்னியின் செல்வன்" தெலுங்கு ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்!

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.

தேனிலவு முடிந்து இந்தியா திரும்பியதும் நயன்தாரா, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் இணைந்தார். 

விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக விளம்பர பணிகளில் ஈடுபட்டார்.
சில நாட்களுக்கு முன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விமானம் மூலம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சுற்றுலா சென்றனர். இது தொடர்பான விமான பயண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து ஸ்பெயின் நாட்டிற்கு செல்வதாக அறிவித்தார்

பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்தார்.
உலகப்புகழ் பெற்ற Sacrada Familia Barcelona தேவாலயத்தில் எடுத்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

மேலும் பார்சிலோனா நகர வீதிகளில் நயன்தாரா உடன் விக்னேஷ் சிவன் கைப்பிடித்து நடந்து வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.‌

பார்சிலோனா நகரை அடுத்து வேலன்சியா நகருக்கு நயன்தாரா & விக்னேஷ் சிவன் சென்றனர். அங்கு பல்வேறு இடங்களில் எடுத்த வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார். மேலும் ஸ்பெயின் போட்டோகிராபர் கெல்மி பில்பாவோ மூலம் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து உள்ளார்.

அந்த புகைப்படங்களுக்கு "நீ உலக அழகியே உன்னைப் போல் ஒருத்தி இல்லையே.. என் உலக அழகியும் இவ்வுலகத்தின் அழகும்" என்று தலைப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

Also Read | கொல மாஸ் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வெளியானது ஜெயிலர் படத்தின் FIRST LOOK போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan shared Nayanthara Latest Photoshoot at Valancia Spain

People looking for online information on Nayanthara, Nayanthara Latest Photoshoot, Nayanthara Latest Photoshoot at Valancia Spain, Vignesh shivan will find this news story useful.