அஜித்தின் மாஸ் பஞ்ச் வசனம்.. மங்காத்தா ஸ்டில்லுடன் விக்னேஷ் சிவனின் வைரல் இன்ஸ்டா பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக அஜித் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

Vignesh Shivan Shared Mankatha Still with Vivegam Dialogue
Advertising
>
Advertising

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

Vignesh Shivan Shared Mankatha Still with Vivegam Dialogue

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.  AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத் & சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

AK61க்கு பின் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித்தின் மங்காத்தா படத்தின் ஸ்டிலுடன், விவேகம் படத்தில் அஜித் பேசும் வசனமான "எண்ணம் போல் வாழ்க்கை"  வசனத்துடன் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம்  ஸ்டோரியால் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு அஜித் குமாரின் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Shared Mankatha Still with Vivegam Dialogue

People looking for online information on Ajith Kumar, AK61, AK62, Valimai, Vignesh shivan will find this news story useful.