நயனுக்கு சொல்லிக் கொடுத்த விக்கி..😍 வைரலாகும் 'நானும் ரவுடி தான்' BTS வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நானும் ரவுடி தான்' திரைப்படம்.

Advertising
>
Advertising

Also Read | வெங்கட் பிரபு & நாக சைதன்யா இணையும் புதிய படம்.. வெளிவந்த சரவெடி அப்டேட்! முழு விவரம்

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக  நடித்திருந்தார். நயன்தாரா, செவித்திறன் குறைபாடுடைய பெண்ணாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக  நடித்திருந்தார். பார்த்திபன் வில்லனாகவும், ஆர் ஜே பாலாஜி காமெடி ரோலிலும் நடித்தனர். அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்கள் ஆகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்- நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ஏழு வருட இனிமையான அனுபவங்கள். இந்த திரைப்படம், இந்த வேலை தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. எப்பொழுதும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் தனுஷ் சார்!" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட படப்பிடிப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Also Read | சிவகார்த்திகேயன் நடித்த 'PRINCE'.. படத்தின் OTT- உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! முழு விவரம்

நயனுக்கு சொல்லிக் கொடுத்த விக்கி..😍 வைரலாகும் 'நானும் ரவுடி தான்' BTS வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Shared BTS Video of Naanum Rowdy Thaan

People looking for online information on Naanum rowdy thaan, Nayanthara, Vignesh shivan will find this news story useful.