AK62: "அமைதிக்கு முன் புயல்".. அஜித்குமாரின் புகைப்படத்தை பகிர்ந்து விக்னேஷ் சிவன் வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் பைக் ரைடு புகைப்படத்தை பகிர்ந்து விக்னேஷ் சிவன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "லட்ச லட்சமா சம்பாதிச்ச மனுசன.. இப்படி பாத்திரம் கழுவ".. G.P முத்துவை கலாய்த்த அமுதவாணன்!

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் துணிவு படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.  துணிவு படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.

ஐத்ராபாத்  சென்னை & விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தற்போது தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் படப்பிடிப்பு நடந்து நேற்றுடன் நிறைவடைந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில்,  நடிகர் அஜித்குமார் பைக் ரைடு செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, "அமைதிக்கு முன் புயல்" என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அஜித்குமார் புத்தர் சிலை முன்பு நிற்பது போல் தெரிகிறது. புத்தரை அமைதியின் உறைவிடமாக வைத்து, அமைதிக்கு முன்னே 'புயல்' அஜித் குமார் நிற்கிறார் என பொருள் கொள்ளும் படி விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | கார்த்தி நடிக்கும் "சர்தார்".. டிரெய்லர் ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் தெறி அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Shared Ajithkumar Bike Ride Image with Buddha

People looking for online information on Ajith Kumar, Vignesh shivan will find this news story useful.