'துணிவு' படத்தின் மூன்றாவது லுக்.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த அஜித்தின் மிரட்டல் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் புதிய லுக் உடைய துணிவு படத்தின் போஸ்டரை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "ரவுடியா நீ".. "ரவுடித்தனம் பண்ணிட்டு இருக்க நீ".. அசீமிடம் கோபப்பட்ட அமுதவாணன் & விக்ரமன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான  அஜித்குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் துணிவு படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.  துணிவு படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த துணிவு படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனலும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துணிவு படத்தின் மூன்றாவது போஸ்டரின் Fan Made வெர்சனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இந்த மூன்றாவது போஸ்டர் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக சென்னை ஜோதி தியேட்டரில் பேனர் வடிவில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | துணிவு படத்தில் நடிகர் அஜித் ஸ்டைலிஷ்ட் இவரா? விஜய் & தனுஷ் கூட மட்டும் இத்தனை படமா!

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Shared Ajith Kumar Thunivu Third Look

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Thunivu Third Look, Thunivu, Vignesh shivan will find this news story useful.