துணிவு BLOCKBUSTER.. தெறியான போஸ்டரை பகிர்ந்த AK62 இயக்குனர் விக்னேஷ் சிவன்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Advertising
>
Advertising

பொங்கலை முன்னிட்டு இன்று (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படமான 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்திய நேரப்படி அதிகாலை 1 மணிக்கு இந்த திரைப்படம் வெளியானது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துணிவு படத்தின் புதிய BLOCKBUSTER போஸ்டர்களை பகிர்ந்துள்ளார். மேலும் ரிலீஸ் நாள் போஸ்டரையும் விக்னேஷ் சிவன் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Shared Ajith Kumar Thunivu Blockbuster Poster

People looking for online information on Ajith Kumar, Thunivu will find this news story useful.