"வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில்…” திருமணத்துக்கு முன் விக்னேஷ் சிவன் பகிர்ந்த VIRAL POST

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் இன்று நடிகை நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

Advertising
>
Advertising

நட்சத்திர ஜோடிகள்…


கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் காதலித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் கூட, இருவருமாக இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதையடுத்து அவர்களின் திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

அறிவிப்பு…


சமீபத்தில் நடந்த Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் மேடையில் விருது வென்றிருந்த விக்னேஷ் சிவன், விரைவில் திருமணம் குறித்த தகவலை வெளியிடுவோம் என்று அந்த நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வரும் ஜூன் மாதம், 9 ஆம் தேதியன்று, விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளதாக இரு தினங்களுக்கு முன் நடந்த (07.06.2022) பத்திரிக்கையாளர் சந்திப்பில் விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். நெருங்கிய உறவினர்கள் & நண்பர்கள் இந்த நிக்ழ்வில் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவனின் பதிவு…

இதையடுத்து தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் “கடவுளுக்கு நன்றி,  என் வாழ்க்கையில் கடந்து வந்த அனைத்து அழகான மனிதர்களிடமிருந்தும் நல்ல எண்ணங்களுக்கும் நன்றி. ஒவ்வொரு நல்ல உள்ளமும், ஒவ்வொரு நல்ல தருணமும், ஒவ்வொரு நல்ல தற்செயல் நிகழ்வும், ஒவ்வொரு நல்ல ஆசீர்வாதமும்… ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும்.. வாழ்க்கையை அழகாக்கிய ஒவ்வொரு பிரார்த்தனையும் இந்த வாழ்க்கையை அழகாக்கியுள்ளன. நான் உங்கள் அன்புக்கும் பிராத்தனைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.  இப்போது, அனைத்தும் என் வாழ்க்கையின் அன்பிற்குரியவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது!
என் தங்கமே! சில மணிநேரங்களில் நாம் மணமேடையில் நடப்பதை எண்ணி பூரிப்பாக இருக்கிறது. எல்லா நன்மைக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் மற்றும் எதிர்நோக்குகிறோம். எங்கள் அன்பான குடும்பத்தின் முன் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறோம்.” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan recent post on wedding day viral

People looking for online information on Marriage, Nayanthara, Vignesh shivan will find this news story useful.