சிம்பு மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்திருந்த 'போடா போடி' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
மகன்களுடன் 'Weekend' ஸ்பெஷல்.. ஃபுல் சாப்பாடு, அல்டிமேட் 'Fun'.. மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இதற்கு அடுத்தபடியாக, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி இருந்தது.
அதே போல, 'பாவ கதைகள்' என்னும் தமிழ் அந்தாலஜியில், ஒரு பகுதியையும் விக்னேஷ் இயக்கி இருந்தார். இதற்கு அடுத்தபடியாக, அவரின் இயக்கத்தில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்னும் திரைப்படம், வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விக்னேஷ் சிவனின் அடுத்த படம்
விஜய் சேதுபதியுடன் சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, மக்கள் மத்தியில் நல்லதொரு பாராட்டினை பெற்றிருந்தது. இதனால், திரைப்படத்தின் ரீலீஸையும் எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து வருகின்றனர்.
வரதட்சணை குறித்த பதிவு
இந்நிலையில், வரதட்சணை குறித்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. வரதட்சணை என்பதன் மூலம், தமிழகத்தில் உள்ள பல குடும்பங்கள் தத்தளித்து வறுமையில் இருப்பதை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில், இதற்கு பதிலடி கொடுக்கும் படியான பதிவு ஒன்றை தான் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
அடேங்கப்பா..
வரதட்சணை கொடுப்பதால் உள்ள நன்மைகள் பற்றி, கல்லூரி ஒன்றின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், "அடேங்கப்பா, க்ளாப்ஸ் க்ளாப்ஸ்" என குறிப்பிட்டு, மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் பகிர்ந்த பதிவில் உள்ள புகைப்படத்தில், வரதட்சணை வாங்குவதால், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களின் கல்வி
அதே போல, அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்ற பயத்தில் பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் படிக்க வைப்பதாகவும், அப்படி படித்து வேலைக்கு செல்லும் பட்சத்தில், அவர்களுக்கு டிமாண்ட் செய்யப்படும் வரதட்சணை குறைவாக இருக்கும் என்பதால், பெண்களின் கல்வி மேம்படவும் வழி வகுக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் விட, கடைசி பாயிண்ட்டில், அதிக வரதட்சணை கொடுத்தால், அழகாக இல்லாத பெண்ணுக்கு கூட சிறந்த வரன் அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி, தன்னுடைய எதிர்ப்பை பொது வெளியில் சொன்ன விக்னேஷ் சிவனை பாராட்டியும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"4 கார் இருக்குறப்போ எதுக்கு சைக்கிள்ல போனீங்க??.." நெல்சனின் கேள்வி & விஜய் பதில்ஸ்