விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் கடந்த (09.06.2022) அன்று நடைபெற்றது.
Also Read | “என்ன நடிக்க விட்டீங்கன்னா 300 கோடி… வந்துட்டு இருக்கு”… ‘விக்ரம்’ வசூல் பற்றி பேசிய கமல்
மகாபலிபுரத்தில் உள்ள செரேட்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் & சினிமா துறை நண்பர்கள் இந்த நிக்ழ்வில் கலந்துகொண்டனர்.
சிவாச்சாரியார்கள் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு அன்று மதியம் கல்யாண விருந்து வழங்கப்பட்டது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.
திருமணத்திற்கு பின் அடுத்த நாள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு முதல்முறையாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா மறுவீட்டு அழைப்புக்கு கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள நயன்தாரா வீட்டுக்கு சென்றுள்ளனர்.
மேலும், கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கு சென்று ஜோடியாக சாமி தரிசனம் செய்தனர். இந்த வீடியோ & போட்டோக்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன.
Also Read | படத்தில் நடித்த குழந்தைகள் வளர 7 வருஷம் காத்திருந்த பெண் இயக்குனர்… மீண்டும் 'ஷூட்டிங்’