ஸ்பெயின் நகர வீதிகளில் உலா வரும் நயன்தாரா & விக்னேஷ் சிவன்.. இணையத்தை கலக்கும் செம வீடியோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் ஸ்பெயின் நகர வீதிகளில் உலா வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | செம்ம.. ரிலீசுக்கு முன் 'திருச்சிற்றம்பலம்' படக்குழுவை சந்தித்த தனுஷ்! வைரல் ஃபோட்டோ

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்விற்கு இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.

தேனிலவு முடிந்து இந்தியா திரும்பியதும் நயன்தாரா, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் இணைந்தார். 

விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக விளம்பர பணிகளில் ஈடுபட்டார்.

சமீபத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விமானம் மூலம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றனர். இது தொடர்பான விமான பயண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

பின்னர் பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். நகரின் முக்கிய இடங்களில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இந்திய தேசியக் கொடியுடன் இருக்கும் புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். மேலும் பார்சிலோனா நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற தேவாலயத்தில் எடுத்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | போடு..பிரபல OTT-யில் ரிலீஸாகும் அருண் விஜய் நடித்த 'யானை'.. எப்போ? எதுல?

ஸ்பெயின் நகர வீதிகளில் உலா வரும் நயன்தாரா & விக்னேஷ் சிவன்.. இணையத்தை கலக்கும் செம வீடியோஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Roaming Around in Barcelona Streets

People looking for online information on Nayanthara, Vignesh shivan, Vignesh Shivan Nayanthara will find this news story useful.