‘விக்னேஷ் சிவன் - நயன்தாரா’ தயாரிக்கும் ராக்கி ... முக்கிய கேரக்டரை ரிவீல் செய்த படக்குழு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அழகம் பெருமாள் நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த படம் தரமணி.

இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் வசந்த் ரவி. இவர் தனது அடுத்த படமாக ராக்கி படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்த படத்தில் வசந்த் ரவியுடன் இணைந்து பாரதிராஜா, ஜெயக்குமார், ரவீனா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் படமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் வித்தியாசமான டிரெய்லரை ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருந்தார்.  அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ராமு கலை இயக்குனராகவும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பாரதிராஜா நடிக்கும் மணிமாறன் கேரக்டர் ஒரு வசனக் குறிப்புடன் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் சாணி காயிதம் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

ALSO READ: அஷோக் செல்வன்.. சதீஷின் ஹாஸ்டல் பட FirstLook!.. உடன் இணைந்துள்ள KPY பிரபலம்.. ஹீரோயின் யார்னு பாருங்க!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan nayanthara produced Rocky Bharathiraja character

People looking for online information on Arun Matheswaran, Bharathiraja, Nayanthara, Rocky, Vignesh shivan will find this news story useful.