குல தெய்வம் கோயிலில் நயன்தாரா & விக்னேஷ் சிவன்.. வைரலாகும் சிறப்பு பூஜை வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan Nayanthara Praying at Ancestral Village Temple
Advertising
>
Advertising

விக்னேஷ் சிவன் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

சில மாதங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன்
என பெயரிட்டனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் & நயன்தாரா இருவரும் விமானம் மூலம் இன்று திருச்சி வந்தடைந்தனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  விக்னேஷ் சிவனின் சொந்த ஆற்றங்கரை மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள குல தெய்வமான காமாட்சி அம்மனுக்கு பூஜை நடத்தப்பட்டது. இதில் விக்னேஷ் சிவன் & நயன்தாரா இருவரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன

குல தெய்வம் கோயிலில் நயன்தாரா & விக்னேஷ் சிவன்.. வைரலாகும் சிறப்பு பூஜை வீடியோ! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Praying at Ancestral Village Temple

People looking for online information on Nayanthara, Vignesh shivan will find this news story useful.