“தங்கமே!”...'காதலர் தினத்தில்' விக்னேஷ் சிவனின் வைரல் போஸ்ட்! என்ன சொன்னார்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரௌடி தான் படத்தின் நயன்தாரா நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே உறவு மலர்ந்தது.

இருவரும் தத்தம் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிரும் செய்திகளும், எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆவதுண்டு. இதனிடையே ரௌடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி படங்களை தயாரித்தும் வருகின்றனர்.

ஓடிடி திரைப்படமான பாவக்கதைகளில் ஒரு பகுதியை இயக்கிய, விக்னேஷ் சிவன் தனது புதிய படமான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட பணிகளில் மும்முரமாக இருந்துவரும் நிலையில் அப்படத்தின் ‘ரெண்டு காதல்’ என்கிற முதல் சிங்கிள் டிராக் பாடல் காதலர் தினமாம் பிப்ரவரி 14-ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணையும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் பாரம்பரிய உடையில் புகைப்படத்தை பதிவிட்ட விக்னேஷ் சிவன், “Love.. being in love with you #Thangamey” என்று பதிவிட்டுள்ளார். அண்மைக் காலமாகவே நயன் தாராவை விக்னேஷ் சிவன் தங்கமே என்றழைத்து தம் அன்பை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விக்னேஷ் சிவன் நயன்தாரா vignesh shivan nayanthara love instagram

People looking for online information on Anirudh, காத்துவாக்குல ரெண்டு காதல்Vignesh Shivan, தங்கமே, நயன்தாரா, விக்னேஷ் சிவன், Love, Nayanthara, Samantha, ThangameKaathuVaakulaRenduKaadhal VijaySethupathi, ValentinesDay will find this news story useful.