ஸ்பெயின் வீதிகளில் போட்டோஷூட் நடத்திய நயன்தாரா & விக்னேஷ் சிவன்.. ரொமாண்டிக் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன்‌ & நயன்தாரா ஸ்பெயின் நாட்டின் வேலன்சினா நகர வீதிகளில் பிரபல போட்டோகிராபர் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | மகேஷ் பாபு - பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய ஆக்சன் திரைப்படம்.. ரிலீஸ் எப்போ? தெறி அப்டேட்!

சமீபத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விமானம் மூலம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சுற்றுலா சென்றனர். இது தொடர்பான விமான பயண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து ஸ்பெயின் நாட்டிற்கு செல்வதாக அறிவித்தார்.

பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

உலகப்புகழ் பெற்ற Sacrada Familia Barcelona தேவாலயத்தில் எடுத்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். முன் பின் தெரியாத ஒருவர் அப்போது நயன்தாராவை  எடுத்த போட்டோவை கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார்.

மேலும் பார்சிலோனா நகர வீதிகளில் நயன்தாரா உடன் விக்னேஷ் சிவன் கைப்பிடித்து நடந்து வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.‌

பார்சிலோனா நகரை அடுத்து வேலன்சியா நகருக்கு நயன்தாரா & விக்னேஷ் சிவன் சென்றனர். அங்கு பல்வேறு இடங்களில் எடுத்த வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார். மேலும் ஸ்பெயின் போட்டோகிராபர் கெல்மி பில்பாவோ மூலம் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து உள்ளார்.

"காதல் & வாழ்க்கை" என தலைப்பிட்டு இந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

Also Read | சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு'.. இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா எப்போ? எங்க?

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Latest Photos Valancia Kelmi Bilbao

People looking for online information on Nayanthara, Valancia Kelmi Bilbao, Vignesh shivan, Vignesh Shivan Nayanthara Latest Photos will find this news story useful.