தாய்லாந்து ஹனிமூனின் கடைசி நாள்.. ஜோடியாக போட்டோ எடுத்த விக்கி - நயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தேனிலவுக்காக தாய்லாந்து சென்றனர்.

Advertising
>
Advertising

Also Read | ராமாக துல்கர் சல்மான் - சீதாவாக மிருணாள் நடிக்கும் 'சீதாராமம்'.. செம ரொமான்டிக்கான CLASSIC டீசர்!

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகாபலிபுரத்தில் ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கு சென்று ஜோடியாக சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.

தேனிலவில் இருந்து தொடர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதில் நேற்று தேனிலவின் கடைசி நாளில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். மேலும் தேனிலவு முடிந்து இந்தியா திரும்பும் போது ஹோட்டல் ஊழியர்கள் தம்பதியருக்கு பிரியாவிடை அளித்துள்ளனர். இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

இந்த  வீடியோ & புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன

நயன்தாரா விரைவில் ஷாருக்கானின் ஜவான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் நடிக்கவுள்ளார். மேலும் அவர் பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.  மறுபுறம், விக்னேஷ் சிவன் இப்போது அஜித்துடன் ஏகே 62 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள படத்திற்கு தயாராகி வருகிறார்.

Also Read | K.S. ரவிக்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு! வைரல் போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Last day Bangkok Thailand Honey moon

People looking for online information on Nayanthara, Vignesh shivan, Vignesh Shivan Nayanthara Thailand Honey moon will find this news story useful.