TRENDING: ஹனிமூனில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. ரொமான்டிக் லுக்கில் விக்கி பகிர்ந்த சூப்பர் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | பிரபல கிரிக்கெட் வீராங்கனையின் BIOPIC படம்... வேறலெவலில் தயாரான அனுஷ்கா சர்மா! சூப்பர் அப்டேட்

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகாபலிபுரத்தில் ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது கூட, ​​​​அவர்கள் தங்கள் தேனிலவின் இடத்தை சொல்லவில்லை. சமீபத்தில், புதுமணத் தம்பதிகள் தாய்லாந்தில் இருப்பதாக விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கம் தெளிவுபடுத்துகிறது. இது தவிர, தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

தேனிலவில் இருந்து தொடர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்,  "தாய்லாந்தில் என் (நயன்) தாரத்துடன்" என்று எழுதியுள்ளார். தாரம் என்றால் மனைவி என்று பொருள்.

இந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாராவை அரவணைத்த படி கண்ணத்தை கொஞ்சுவது போலவும் உள்ளது. இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவனே எடுத்துள்ளார்.  நயன்தாரா மஞ்சள் நிற உடையிலும், விக்னேஷ் டி-சர்ட் அணிந்தும் இந்த புகைப்படத்தில் காணப்படுகின்றனர்.

நயன்தாரா விரைவில் ஷாருக்கானின் ஜவான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் நடிக்கவுள்ளார். மேலும் பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.  மறுபுறம், விக்னேஷ் சிவன் இப்போது அஜித்துடன் ஏகே 62 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள படத்திற்கு தயாராகி வருகிறார்.

Also Read | விக்னேஷ் சிவன் - நயன்தாரா கல்யாணத்தை முழுக்க நடத்துனதே இவங்க தானா? வைரலாகும் பதிவு

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Honeymoon Pictures From Thailand

People looking for online information on Nayanthara, Nayanthara Thailand Pictures, Vignesh shivan, Vignesh Shivan Nayanthara Honeymoon Pictures will find this news story useful.