விக்னேஷ் சிவன் பிறந்தநாள்.. துபாயில் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா! கலர்ஃபுல் ROMANTIC PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.

தேனிலவு முடிந்து இந்தியா திரும்பியதும் நயன்தாரா, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் இணைந்தார். 

விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக விளம்பர பணிகளில் ஈடுபட்டார்.
சில நாட்களுக்கு முன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விமானம் மூலம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சுற்றுலா சென்றனர்.

பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்தார்.
உலகப்புகழ் பெற்ற Sacrada Familia Barcelona தேவாலயத்தில் எடுத்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

மேலும் பார்சிலோனா நகர வீதிகளில் நயன்தாரா உடன் விக்னேஷ் சிவன் கைப்பிடித்து நடந்து வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.‌

பார்சிலோனா நகரை அடுத்து வேலன்சியா நகருக்கு நயன்தாரா & விக்னேஷ் சிவன் சென்றனர். அங்கு பல்வேறு இடங்களில் எடுத்த வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார். மேலும் ஸ்பெயின் போட்டோகிராபர் கெல்மி பில்பாவோ மூலம் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்தார். பின்னர் ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இருவரும் தமிழகம் திரும்பினர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் "ஒரு அன்பான குடும்பத்தின் தூய்மையான அன்பினால் நிரப்பப்பட்ட பிறந்தநாள். புர்ஜ் கலீஃபாவிற்கு கீழே   கனவான பிறந்தநாள்..எனது தங்கம் எனது மனைவி கொடுத்த அற்புதமான ஆச்சரியமான பரிசு! இதை விட சிறப்பாகவும் சிறப்பாகவும் பெற முடியாது :)

இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் அவர் எனக்குக் கொடுத்த அனைத்து அழகான தருணங்களுக்காக எப்போதும் கடவுளுக்கு நன்றி!" என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Dubai Birthday Celebration

People looking for online information on Dubai, Nayanthara, Vignesh shivan will find this news story useful.