விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளியிட்ட'ROCKY' படத்தின் செம்ம ரிலீஸ் அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராக்கி திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் பற்றிய செம்ம அப்டேட்டை அந்த படக்குழு அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

கவனம் ஈர்த்த ராக்கி…

அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தில் ’தரமணி’ புகழ் வசந்த் ரவியுடன் இணைந்து பாரதிராஜா, ஜெயக்குமார், ரவீனா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் வித்தியாசமான டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.  அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ராமு கலை இயக்குனராகவும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

விக்னேஷ் சிவன் நயன்தாரா வெளியீடு…

இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீஸூக்கு காத்திருந்த போது அதை தங்களுடைய ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலமாக வெளியிட்டனர் நயன்தாரவும் விக்னேஷ் சிவனும். வழக்கமாக தன்னுடைய படங்களுக்குக் கூட ப்ரமோஷன்களில் அதிகமாக கலந்துகொள்ளாத நயன்தாரா. இந்த படத்தின் வீடியோ புரமோஷன் ஒன்றில் நடித்திருந்தார். இதனால் இந்த படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைத்தது. இதையடுத்து டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகி பரவலானக் கவனத்தைப் பெற்றது. ஆனால் ஆக்ஷன் காட்சிகள் அளவுக்கதிகமாக உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ஆக்ஷன் பட பிரியர்களுக்கு இந்த படம் பிடித்த ஒன்றாக அமைந்தது.

ஓடிடி ரிலீஸ் எப்போது…

இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது மலேசியாவில் உள்ள அஸ்ட்ரோ என்ற ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் 9 நிமிடங்கள் சென்ஸார் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மலேசியாவில் உள்ள ரசிகர்கள் மட்டுமே பார்க்க முடியும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan nayanthara distributed movie ott release update

People looking for online information on Arun Matheswaran, Nayanthara, Vignesh Shiva will find this news story useful.