கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா.
நயன்தாரா, ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன் பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.
அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார். இவர் கடைசியாக தமிழில் அண்ணாத்த,O2, காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட் படங்களில் காணப்பட்டார்.
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் திரைப்படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார். மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படத்திலும் நடித்திருந்தார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
சில வாரங்களுக்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
சமீபத்தில் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் & நயன்தாரா இருவரும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவி செய்துள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு அவர்களுக்கு இந்த உதவியை தம்பதியர் செய்துள்ளனர்.