போடு! KRK ரிலீஸ்.. திருப்பதியில் நயன்தாரா - விக்கி தரிசனம்.. அவரே வெளியிட்ட ஃபோட்டோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன்  பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

Advertising
>
Advertising

அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார்.  இவர் கடைசியாக தமிழில் நெற்றிக்கண், அண்ணாத்த படங்களில் காணப்பட்டார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். வெளியூர் செல்லும் போதும், எங்காவது கோவிலுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும், அது தொடர்பான புகைப்படங்களை பகிர்வார்.

இந்நிலையில், இன்று தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசை ஒட்டி விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருப்பதி சென்றுள்ளனர். திருப்பதியில் சாமி தரிசனம் முடிந்த பின் அதிகாலையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

மேலும் சென்னை திரும்பும் நெடுஞ்சாலையில் தேநீர் வேளைக்காக நிறுத்திய போது எடுத்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்துள்ளார். தற்போது சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லியின் படம், அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படங்களில் நயன்தாரா நடிக்கிறார்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

போடு! KRK ரிலீஸ்.. திருப்பதியில் நயன்தாரா - விக்கி தரிசனம்.. அவரே வெளியிட்ட ஃபோட்டோ..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara at thirupathi Balaji Temple

People looking for online information on Kaathuvakula Rendu Kaadhal, KRK, Nayanthara, Samantha, Vignesh shivan will find this news story useful.