'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | ’பத்துதல’ படத்தின் ’நம்ம சத்தம்’ பாடல்.. சிம்புவின் தெறிக்கும் டான்ஸ் Glimpse வீடியோ!
அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
"திரு.அஜித் குமாருடன் கைகோர்த்ததில் லைக்கா மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஒரு குழுவாக, பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க லைக்கா நேர்மையான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது." என லைக்கா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சில நாட்களாக லண்டனில் இருந்து வீடியோ & புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லண்டனில் இருந்து புகைப்படத்தை பகிர்ந்து "Good Bye London" தலைப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Also Read | பாரதி கண்ணம்மா சீசன் 2 -ல் ஹீரோவாக நடிக்கிறாரா பிரபல சன் டிவி சீரியல் ஹீரோ..?