விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை பிறப்புக்கு பிறகு புதிய பதிவை பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.
அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். சில நாட்களுக்கு முன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விமானம் மூலம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா & வேலன்சியா நகருக்கு நயன்தாரா & விக்னேஷ் சிவன் சென்றனர். ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இருவரும் தமிழகம் திரும்பினர்.
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். அங்கு தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
இன்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பதிவை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "ஐ லவ் யூ டூ & ஐ லவ் யூ த்ரி" என பதிவிட்டுள்ளார். மேலும் குழந்தைகளின் புகைப்படங்களுடன் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.