இது நயன் வீட்டு விழா.. தனது உதவி இயக்குனர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்கி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

Advertising
>
Advertising

அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

சில வாரங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

சமீபத்தில் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் & நயன்தாரா இருவரும் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குனர்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் & வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

விக்னேஷ் சிவனின் உதவி இயக்குனர் பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Celebrate Christmas with Assistant Directors

People looking for online information on Naynathara, Vignesh shivan will find this news story useful.