"இருமுடி கட்டி வாரோமப்பா".. சபரிமலைக்கு போகும் விக்கி.. AIR PORT-ல் குழந்தைகள் பற்றி அளித்த பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

Advertising
>
Advertising

Also Read | 'துணிவு' படத்தில் இன்னும் 5 TRACK.. OST ரிலீஸ் எப்போ? ஜிப்ரான் கொடுத்த EXCLUSIVE தகவல்!

அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

சில மாதங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

சமீபத்தில் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், சென்னை விமான நிலையத்தில் இருமுடி கட்டி உள்ள ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

ரசிகர் ஒருவர் எடுத்த அந்த வீடியோவில் "குழந்தைகள் எப்படி இருக்காங்க?" என்று ரசிகர் விக்னேஷ் சிவனிடம் கேள்வி கேட்க, "குழந்தைகள் நல்லா இருக்காங்க" என்று விக்னேஷ் சிவன் பதில் அளித்தார். விக்னேஷ் சிவன் உடன் நடிகர் ஜெயராமும் சபரிமலை செல்கிறார்.

Also Read | "வாரிசுல இந்த 2 பாட்டுமே பிடிக்கும்".. "நானும் தமனும்".. மனம் திறந்த ஜிப்ரான்!

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan at Chennai Airport traveling to Sabarimala Temple

People looking for online information on Chennai Airport, Sabarimala Temple, Vignesh shivan, Vignesh Shivan at Chennai Airport will find this news story useful.