VIDEO: வைரலாகும் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் டிக் டாக் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா பாதிப்பு மக்களை நாளுக்குநாள் அச்சுறுத்தி வருகிறது. அதற்கு சரியான தீர்வு காணப்படாததால் அது குறித்த அச்சம் மக்களிடையே இருக்கிறது. எளிதில் பரவக்கூடியது என்பதால் மக்கள் அத்தியாவசியம் இல்லாமல் வெளியேறுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 31 ஆம் தேதி வரை விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் உள்ளிட்ட வணிகவளாகங்கள் மூடப்பட்டுள்ளன. அனைத்து விதமான படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து நடிகர் நடிகையர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மாலை 5 மணிக்கு மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் நயன்தாரா, மற்றும் விக்னேஷ் சிவனின் டிக்டாக் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் இருவரும் பலவித எமோஜிகளை ஒன்றாக கைகள் மூலம் செய்து காட்டுகின்றனர். இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து இருவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Watch the video here - Nayanthara & Vignesh Shivan Hand emoji challenge tik tok video

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் டிக்டாக் வீடியோ வைரலாகி வருகிறது | Vignesh Shivan and Nayanthara's TikTok Video goes Viral

People looking for online information on Nayanthara, Tiktok, Vignesh shivan will find this news story useful.