பிரபல பாலிவுட் நடிகையுடன் விக்கி - நயன்.. இணையத்தில் TREND ஆகும் ஃபோட்டோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் க்யூட் ஜோடிகளாக வலம் வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர், கடந்த ஜூன் மாதம் 09 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர்.

Advertising
>
Advertising

Also Read | பிரபல நடிகர் வெளியிட்ட PONNIYIN SELVAN படத்தின் BTS போட்டோ.. வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு!

நானும் ரௌடி தான் திரைப்படத்தின் போது, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோருக்கு இடையே காதல் மலர, இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு இருவரும் சுற்றித் திரிந்து வந்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

கலந்து கொண்ட பிரபலங்கள்

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 09 ஆம் தேதியன்று, மகாபலிபுரத்தில் வைத்து விக்கி - நயன் திருமணம் நடைபெற்றிருந்தது. இதில் இருவரின் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டனர். மேலும், தங்களின் திருமணத்தில் கலந்து கொண்ட இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் எஸ் ஜே சூர்யா, இயக்குனர் அட்லி, அனிருத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

பேங்காக்கில் 'தேனிலவு'

தங்களின் திருமணத்திற்கு பின்னர், திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று சாமி தரிசனமும் செய்திருந்தனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. இதன் பின்னர், தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். தேனிலவில் இருந்து தொடர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து பகிர்ந்துள்ளார். இந்த வீடியோக்கள் & புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

பாலிவுட் நடிகையுடன் விக்கி - நயன்

இதனைத் தொடர்ந்து, இந்திய திரும்பிய பின்னர், ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பிலும் நயன்தாரா இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது, மும்பையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருப்பதாக கூறப்படும் நிலையில், பிரபல பாலிவுட் நடிகையுடன் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஜவான் படத்தின் படப்பிடிப்பிற்காக, நடிகை நயன்தாரா மும்பையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அங்கே பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவை அவர்கள் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா ஸ்டோரியியில் பகிர்ந்த மலைக்கா அரோரா, புது ஜோடிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Also Read | சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' தமிழக ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரபல முன்னணி தயாரிப்பாளர்!

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan and nayanthara meets malaika arora

People looking for online information on Malaika Arora, Nayanthara, Vignesh shivan will find this news story useful.