BREAKING: விக்னேஷ் சிவன் - நயன்தாரா டும் டும் டும்..!! குறிச்சாச்சு தேதி.! வந்தாச்சு சேதி.. எங்க? எப்ப?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் காதலித்து வந்த நிலையில், தற்போது அவர்களின் திருமணம் குறித்து அசத்தல் தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது.

இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்லதொரு வரவேற்பை பெற்றிருந்தது.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

இதனிடையே, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரியும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் கூட, இருவருமாக இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

இது ஒருபுறம் இருக்க, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் மேடையில் விருது வென்றிருந்த விக்னேஷ் சிவன், விரைவில் திருமணம் குறித்த தகவலை வெளியிடுவோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

திருமணம் எங்கே?

வரும் ஜூன் மாதம், 9 ஆம் தேதியன்று, விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், எங்கு வைத்து நடைபெறும் என்ற விவரமும் தற்போது வெளி வந்துள்ளது. மகாபலிபுரத்தில் வைத்து, வரும் ஜூன் 9 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தரப்பிலிருந்து விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan and nayanthara marriage at mahabalipuram sources

People looking for online information on Marriage, Nayanthara, Vignesh shivan will find this news story useful.