'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை அடுத்து 'பாவ கதைகள்' என்கிற அந்தாலஜி படத்தின் ஒரு கதையினை இயக்கியிருந்தார் விக்னேஷ் சிவன்.
இந்த நிலையில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி இருக்கிறார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் சேர்ந்து சமந்தா, நயன்தாரா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி - நயன்தாரா கூட்டணி மீண்டும் இணையும் இரண்டாவது படம் இந்தப் படம்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க, ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தை இணைந்து தயாரிக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 2020ஆம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டு கட்ட படப்பிடிப்புகளாக நடந்த இந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த விக்னேஷ் சிவன் காதலர் தினத்தன்று காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அறிவிப்பு ரசிகர்களை தேடி வருவதாகக் கூறி, தனது ட்விட்டர் பக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் பட போஸ்டரை பதிவிட்டுள்ளார். 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தர்பார் திரைப்படம், இறுதியில் மூக்குத்தி அம்மன் திரைப்படம், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படங்களாக இருந்தன. இவற்றைத் தொடர்ந்து நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த கொண்டாட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி. தொடர்வோம்” என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். விக்கியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட போஸ்டரில் இரண்டு நயன்தாரா மற்றும் சமந்தா இருவரின் பின்னந்தலைப் பகுதிகளும் காணப்படுகிறது. எனினும் இதில் யார் நயன்தாரா, யார் சமந்தா என ரசிகர்கள் கெஸ் செய்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.