தனுஷ் குரலில் இளையராஜா இசையில்.. வெளியான விடுதலை படத்தின் முதல் சிங்கிள் பாடல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'விடுதலை' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Viduthlai Movie First Single Song Onnoda Nadandhaa
Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | வெளிநாட்டில் மூத்த மகளுடன் சுந்தர் சி & குஷ்பு.. வைரலாகும் டூர் போட்டோஸ்!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ஒன்னோடு நடந்தா" வெளியாகி உள்ளது. தனுஷ் & அனன்யா பட் குரலில் இளையராஜா இசையில் இந்த பாடல் வெளியாகி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

பாடலாசிரியர் சுகா இந்த பாடலை எழுதியுள்ளார். டூயட் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. மலைப்பிரதேசப் பிண்ணனியில் இந்த பாடலின் வீடியோ அமைந்துள்ளது.

Also Read | வா வா என் தேவதையே.. மகளுடன் ஆர்யா & சாயீஷா.. ரசிகர்களை கவரும் CUTE PHOTOS

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Viduthlai Movie First Single Song Onnoda Nadandhaa

People looking for online information on Dhanush, Ilaiyaraaja, Onnoda Nadandhaa, Vetrimaaran, Viduthalai, Viduthlai Movie First Single Song will find this news story useful.