"இவங்களுக்கு நம்ம கொடுக்கப்போற தண்டனை".. விஜய்சேதுபதி 'விடுதலை' டப்பிங் GLIMPSE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'விடுதலை' படத்தின் டப்பிங் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

Viduthlai Movie Dubbing Work Glimpse Video Released
Advertising
>
Advertising

Also Read | தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண்.. ஜோடியான பிரபல இளம் நடிகை! வேறலெவல் COMBO

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  விடுதலை படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இதனை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் முன்னிலையில் டப்பிங் பேசும் வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. "தோழரே இதுக்கு உங்கள் அணுகுமுறை தான் சரியா இருக்கும். இவங்களுக்கு நம்ம கொடுக்கப்போற தண்டனை" என விஜய் சேதுபதி டப்பிங் பேசும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

Also Read | ஷாருக், தீபிகா படுகோனே நடித்த பதான்... படம் பார்த்த பிறகு ஹிருத்திக் ரோஷன் சொன்ன கமெண்ட்..!!

மற்ற செய்திகள்

Viduthlai Movie Dubbing Work Glimpse Video Released

People looking for online information on Viduthlai, Viduthlai Movie Dubbing update will find this news story useful.