கத்ரினா கைஃப் - விக்கி கவுஷல் பிரம்மாண்ட திருமண ஏற்பாடு.. மணப்பெண்ணுக்கு ராணி பத்மாவதி அறை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலுக்கும் (Vicky kaushal) , பிரபல பாலிவுட் முன்னணி நடிகை கத்ரீனா கைஃபுக்கும் (Katrina kaif) வரும் டிசம்பர் 9-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. 

Vicky Kaushal Katrina Kaif wedding Rani Padmavati suite groom
Advertising
>
Advertising

ராஜஸ்தானில் மிக பிரமாண்டமாக திருமணம் நடக்கவுள்ள நிலையில் இவர்களது மெஹந்தி, சங்கீத், ஹல்தி  உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் களைகட்டியுள்ளன. இந்த திருமணம் ராஜஸ்தானில் உள்ள பார்வாரா - சவாய் மாதோபூர் சிக்ஸ் சென்ஸ் கோட்டை  (Six Senses Fort Barwara) ரிசார்ட்டில் நடக்கவிருக்கிறது.

Vicky Kaushal Katrina Kaif wedding Rani Padmavati suite groom

இதில், விக்கி  கவுஷல் ராஜா மன்சிங் அறையிலும், கத்ரீனா கைஃப் ராணி பத்மாவதி அறையிலும் தங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த மெகா  ஜோடிகளின் திருமணம் குறித்த தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், இவர்களின் திருமணத்துக்கு பாதுகாப்பும் பலப்படுத் தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக இந்த திருமணத்திற்காக 6-ம் தேதியே மும்பையில் இருந்து புறப்பட்டு சென்ற போது கத்ரீனா கைஃப் பத்திரிக்கையாளர்களை சந்தித்திருந்தார். எனினும் சிரித்த முகத்துடன் விடைபெற்றார். மேலும் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து இந்த திருமண ஜோடி விஐபிக்கள் செல்லும் வழியாக வெளியில் செல்வதற்கு பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

Vicky Kaushal Katrina Kaif wedding Rani Padmavati suite groom

People looking for online information on KatrinaVickywedding, VicKat, VickyKatrinaWedding, Vickykaushal will find this news story useful.