"வேட்டையாடு விளையாடுல இந்த ஆக்ஷன் சீன் DIRECT பண்ணது இந்த இயக்குநரா??" - GVM

முகப்பு > சினிமா செய்திகள்

By |

HR Pictures சார்பில் ரியா சிபு தயாரிப்பில், இந்திய அளவில் புகழ் பெற்ற முன்னணி நடன இயக்குநரான பிருந்தா இயக்கத்தில் உருவாகி இருக்கும் "தக்ஸ்" திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

Advertising
>
Advertising

Also Read | VIDEO: விக்ரம் நடிக்கும் "துருவ நட்சத்திரம்".. ரிலீஸ் எப்போ? கௌதம் மேனன் கொடுத்த தெறி அப்டேட்.!

இந்த படத்தில் ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை பிரியேஷ் குருசாமியும், படத்தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனியும் செய்கின்றனர்

'தக்ஸ்' படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீட்டு விழா, சத்யம் திரை அரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் ஆர்யா, இயக்குனர்கள் கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தேசிங்கு பெரியசாமி, ரவியரசு, நடிகை குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், கலா மாஸ்டர் இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றனர்.

இந்த நிகழ்வில் பேசி இருந்த ஆர்யா, பிருந்தாவின் நிஜ கதாபாத்திரம் ஆக்ஷனோடு தான் இருக்கும் என்றும் அது இந்த படத்திலும் பிரதிபலித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போல, நடிகை குஷ்பூ, பிருந்தாவால் கண்டிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளை சுலபமாக எடுக்க முடியும் என்றும் அவர் அதற்காகவே பழக்கப்பட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, இயக்குனர் பார்த்திபன், கே பாக்யராஜ், தேசிங்கு பெரியசாமி, நடிகர் ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலரும் பிருந்தா குறித்தும், தக்ஸ் படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ குறித்தும் ஏராளாமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும், இதில் கலந்து கொண்ட இயக்குனர் கெளதம் மேனன், வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் ஆக்ஷன் காட்சி குறித்து பேசிய விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. “பிருந்தா ஒரு மான்ஸ்டர், என்னுடைய அனைத்து படங்களிலும் பாடல்கள் சிறப்பாக வர அவரும் ஒரு காரணம். வேட்டையாடு விளையாடு படத்தில் 'கற்க கற்க' பாடலில் வரும் ஆக்‌ஷன் பகுதிகளை அவர் தான் இயக்கினார். அதனால் அவர் ஆக்‌ஷன் திரைப்படத்தை உருவாக்குகிறார் என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமில்லை, அவர் கண்டிப்பாக பெரிய இடத்தை தொடுவார். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என கூறினார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசி இருந்த டான்ஸ் மாஸ்டர் மற்றும் இயக்குனர் பிருந்தா, "எனது முதல் படமான ஹே சினாமிகாவில் இருந்து வேறு ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று நினைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளேன்.

எனது தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், உதவி இயக்குநர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிகொள்கிறேன். இந்த படத்தை எடுக்க எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சிபு அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி" என கூறினார்.

Also Read | PONNIYIN SELVAN: 'தஞ்சைக்கு யார் வர்றீங்க?' .. ஆதித்த கரிகாலனின் ட்வீட்.. ஜாலியாக பதிலளித்த 'PS1' நடிகர்கள்!

Vettaiyaadu Vilaiyaadu Song action Directed By Brinda

People looking for online information on Brindha, Hey Sinamkia, Thugs will find this news story useful.