விடுதலை -ல் விஜய் சேதுபதி ROLE-ல நடிக்கவிருந்த பாரதிராஜா.. என்ன ஆச்சு? - வெற்றிமாறன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "விடுதலை படத்துக்கு முதல்ல போட்ட பட்ஜெட் இத்தனை கோடி ரூபாய் தான்".. மனம் திறந்த வெற்றிமாறன்!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Images are subject to © copyright to their respective owners.

விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் டிரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், "விஜய் சேதுபதி ரோலில் முதலில் நடிக்க இருந்தது பாரதிராஜா சார் தான்.

லொக்கேஷன் பாத்துட்டு வந்த பிறகு பாரதிராஜா சாரை போய் பார்த்து, "கண்டிப்பா நீங்க அங்க மேல ஏறி வந்து பண்ண முடியாது சார்." என சொன்னேன். அவர் ரொம்ப கோவப்பட்டாரு. "நான் கெஞ்சி கேட்கிறேன், நீங்க இந்த படத்துக்கு வேணாம் சார்". அப்படினு சொன்னேன். அப்பறம் தான் விஜய் சேதுபதி இந்த ரோலுக்கு ஒரே ஆப்சன். விடுதலை படத்துக்கு உள்ள விஜய் சேதுபதி வந்தார்.    " என வெற்றிமாறன் பேசினார்.

Also Read | "விடுதலை பட ரயில் செட்டுக்கு மட்டும் இம்புட்டு கோடி செலவு".. வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

விடுதலை -ல் விஜய் சேதுபதி ROLE-ல நடிக்கவிருந்த பாரதிராஜா.. என்ன ஆச்சு? - வெற்றிமாறன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaran speech about Vijay Sethupathi and Bharathi Raja Viduthalai

People looking for online information on Bharathi Raja, Soori, Vetrimaaran, Vetrimaran speech, Viduthalai, Vijay Sethupathi will find this news story useful.