வாடிவாசல்.. வடசென்னை - 2 எப்போ? வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் அப்டேட்! FANS HAPPY அண்ணாச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெற்றிமாறன், வட சென்னை பார்ட் 2, வாடிவாசல் படங்கள் குறித்த அப்டேட்டை கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Viduthalai : மக்கள் படை தலைவனாக மக்கள் செல்வன்.. புரட்சி போலீஸாக சூரி.. விடுதலை ட்ரெய்லர்.!

இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள் (ஒரு பகுதி)' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் "சி சு செல்லப்பா" எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய "அசுரன்" மற்றும் "விசாரணை" படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "விடுதலை" படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே.

முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் டைட்டில் லுக் கடந்த ஆண்டு வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

வாடிவாசல் படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  படத்தின் பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன் வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

Images are subject to © copyright to their respective owners.

இந்த வெள்ளோட்ட படப்பிடிப்பில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சூர்யா பயிற்சி எடுக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ  சூர்யா பிறந்த நாளை ஒட்டி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இதில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன், "விடுதலை படத்தின் இரண்டு பாகங்களின் பணிகள் முடிந்ததும் வாடிவாசல் திரைப்படம் தொடங்கும். வாடிவாசல் அடுத்து வட சென்னை - 2 துவங்கும்" என்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

Also Read | "8 நாள் கால்சீட்னு சொல்லி கூப்பிட்டு போய் 65 நாள்.." வெற்றிமாறன் குறித்து பேசிய விஜய் சேதுபதி!

வாடிவாசல்.. வடசென்னை - 2 எப்போ? வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் அப்டேட்! FANS HAPPY அண்ணாச்சி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaran speech about Vadivaasal and Vada Chennai Part 2

People looking for online information on Vada Chennai Part 2, Vadivaasal, Vetrimaaran, Vetrimaran speech, Viduthalai, Viduthalai Audio Launch will find this news story useful.