சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்'.. "அந்த ஒரு ஷாட்டை கண்டிப்பா எடுக்கனும்".. வெற்றிமாறன் EXCLUSIVE தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெற்றிமாறன்,  நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றில் வாடிவாசல் படம் குறித்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | தனுஷ் நடிப்பில் 'சூதாடி'.. "அந்த படம் நின்று போக இதுதான் காரணம்!" மனம் திறந்த வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள் (ஒரு பகுதி)' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் "சி சு செல்லப்பா" எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய "அசுரன்" மற்றும் "விசாரணை" படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "விடுதலை" படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே.

முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் டைட்டில் லுக் கடந்த ஆண்டு வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

வாடிவாசல் படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  படத்தின் பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன் வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

Images are subject to © copyright to their respective owners.

இந்த வெள்ளோட்ட படப்பிடிப்பில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சூர்யா பயிற்சி எடுக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ  சூர்யா பிறந்த நாளை ஒட்டி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை வெற்றிமாறன் அளித்துள்ளார். அதில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் படம் குறித்து பேசியுள்ளார். "பாலு மகேந்திரா சார் சொன்னது, "என்னோட லென்ஸிங்ல மாடு காலை அப்படியே கோபமா புழுதி பறந்தா எப்படி இருக்கும்?". அந்த விஷூவலை பாலு மகேந்திரா சார் சொல்லிட்டே இருப்பார். அந்த ஷாட்டை வாடிவாசல் படத்துல எடுத்தே ஆகனும்னு யோசிச்சுட்டு இருக்கேன்" என  வெற்றிமாறன் பேசினார்.

Also Read | சிறந்த நடிகன்னு அப்பவே சொன்னேன்.. சூரி பத்தி சரியா கணிச்ச விஜய் சேதுபதி!!

சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்'.. "அந்த ஒரு ஷாட்டை கண்டிப்பா எடுக்கனும்".. வெற்றிமாறன் EXCLUSIVE தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaran about Vadivaasal Movie Balu Mahendra Favourite Shot

People looking for online information on Balu mahendra, Suriya, Vadivaasal, Vadivaasal Movie, Vetrimaaran will find this news story useful.