BREAKING: வெற்றிமாறன் இயக்கும் விடுதலை - 1.. ஷூட்டிங் அப்டேட்! பட ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த பிரத்யேக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

Advertising
>
Advertising

Also Read | விஜய்க்கு கதை சொன்னது உண்மையா.? Love Today இயக்குநர் பிரதீப் சொன்ன‌ பதில்.!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகிறது.

சில நாட்களுக்கு முன், ​​விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது விடுதலை-1 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  சிறுமலை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்ற விடுதலை-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது செங்கல்பட்டு பகுதியில் நடந்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கல்பட்டு படப்பிடிப்பில் ரயில் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு நாட்கள் இதற்கான படப்பிடிப்பு செங்கல்பட்டு பகுதியில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை படத்தின் நடிகர்கள் குழுவில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த நட்சத்திரக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த விடுதலை படத்திலும் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

இந்த விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த தேதி தற்காலிக தேதியாகும். விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | "எவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்தாலும்".. சமந்தா நெகிழ்ச்சியான பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran VIDUTHALAI Movie Tentative Release Date Sources

People looking for online information on Vetrimaaran, Viduthalai, Viduthalai Shooting update will find this news story useful.