பிரம்மாண்டமாக தயாராகும் நிகழ்ச்சி?.. வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அசுரன் மற்றும் பாவ கதைகள் அந்தாலஜியில் 'ஓர் இரவு' உள்ளிட்ட படைப்புகள் இயக்கியதை தொடர்ந்து தற்போது 'விடுதலை' என்னும் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இது விஷம்.. இது மருந்துனு தெளிவுபடுத்துற பாடம் பகாசூரன்..".. - RK செல்வமணி.

எல்ட்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாகவும் உருவாகி வருகிறது.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக கொண்டு தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். அதே போல, ஜெயமோகன் இந்த படத்தில் எழுத்தாளராகவும் பணிபுரிகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

பல இடங்களில் விடுதலை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இவை அனைத்தும் முடிவடைந்துள்ளதாகவும் தெரிகிறது. அதே போல, படத்தின் போஸ்டர்களும் வெளியாகி இருந்த நிலையில், அதில் சூரி ஒரு காவலர் போன்றும், விஜய் சேதுபதி ஒரு கைதி போன்றும் வருகிறார்கள். வெற்றிமாறன் படம் என்றால் இருக்கும் அதே எதிர்பார்ப்பு, விடுதலை படத்தின் மீதும் அதிகம் உருவாகி உள்ளது.

இதனிடையே, விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்திருந்தது. அதே போல, சமீபத்தில் விடுதலை படத்தின் டப்பிங்கும் நடைபெறு வந்தது. மேலும், இளையராஜா இசையில், தனுஷ் மற்றும் அனன்யா பட் ஆகியோர் பாடி இருந்த "ஒன்னோட நடந்தா" என்ற சிங்கிளும் வெளியாகி இருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், விடுதலை படம் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து சில தகவல்களும் கிடைத்துள்ளது. அதன்படி, விடுதலை படத்தின் ட்ரைலர், மார்ச் 08 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த ட்ரைலர் வெளியீட்டு விழா, Lady Andal பள்ளியில் வைத்து நடைபெற இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | "கஷ்டம்ன்னா அவருகிட்ட தான் சொல்லுவேன்".. விவேக் மறைவால் கலங்கி இருந்த மயில்சாமி.. Throwback!!

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran viduthalai movie new update on trailer deets

People looking for online information on Vetrimaaran, Vetrimaaran viduthalai movie update, Viduthalai, Vijay Sethupathi will find this news story useful.