வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் வைரலாகும் BTS புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தின் BTS புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Advertising
>
Advertising

இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நக்சலைட்டாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே கோ, கவண் போன்ற படங்களை தயாரித்தவர்.

விடுதலை படத்தின் முக்கிய படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. தற்போது கடலூர் பன்ருட்டியில் படப்பிடிப்பு நடந்து வ்ருகிறது.  இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடுதலை படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran viduthalai movie bts picture went viral

People looking for online information on Soori, Viduthalai, Vijay Sethupathi will find this news story useful.