கவிஞர் பிரமிள் பற்றிய ஆவணப்படம்…. களமிறங்கிய வெற்றிமாறன் & தங்கம்– வெளியான புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் தங்கம் ஆகிய இருவரும் இணைந்து மறைந்த தமிழ்க் கவிஞர் பிரமிள் பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கி வருகின்றனர்.

Advertising
>
Advertising

கவிஞர் பிரமிள் ஆவணப்படம்…


தருமு சிவராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் பிரமிள் தமிழ் இலக்கியத்தில் கவிதை மற்றும் கவிதை குறித்த கட்டுரைகள் என்று தீவிரமாக இயங்கியவர். தமிழின் தலைசிறந்த கவிஞராக வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் கருதப்படுபவர்.  இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் பிரமிள். தமிழகத்துக்கு 1970 களில் வந்தவர் இறக்கும் வரை தமிழகத்திலேயே வசித்தார். இலக்கிய உலகில் பிரசித்தி பெற்ற எழுத்து பத்திரிக்கையில் தனது கவிதைகளை எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து கவிதை, சிறுகதை, நாடகங்கள் மற்றும் களிமண் சிற்பங்கள் செய்வது ஆகியவற்றில் ஈடுபாட்டோடு செயல்பட்டார். 1997  ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் வேலூர் மாவட்டம் கரடிகுடி என்ற பகுதியில் அவர் மறைந்தார்.

பிரமிள் பற்றிய இயக்குனர் தங்கத்தின் பேச்சு…

சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் எழுத்தில் உருவாகி வரும் இறைவன் மிகப்பெரியவன் அறிமுக விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய தங்கம் பிரமிள் பற்றி சிறப்பான உரை ஒன்றை நிகழ்த்தினார். அவரது பேச்சின் போது ஒரு கவிதையை எடுத்து விளக்கிக் கூறி பிரமிள் பாரதியை விட சிறந்த கவிஞர். அவரை தமிழ் வாசக உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு பரவலாக கவனம் பெற்றது.

காற்றின் தீராத பக்கங்களில்…

இந்நிலையில் இப்போது பிரமிள் பற்றிய ‘காற்றின் தீராத பக்கங்களில்’ என்ற ஆவணப்படத்தை தங்கம் இயக்க, வெற்றிமாறன் தயாரிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்ற சிற்பி சிவா கலை இயக்குனராக பணியாற்றுகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது பிரமிளின் நினைவிடம் அமைந்துள்ள வேலூர் மாவட்டம் கரடிகுடியில் நடந்து வருகிறது. பிரமிளின் நினைவிடத்தில் வெற்றிமாறன் மணிமண்டபம் அமைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

 

இந்த ஆவணப்படம் பற்றி முகநூலில் பகிர்ந்துள்ள பிரமிளின் படைப்புகளை பதிப்பித்துள்ள எழுத்தாளர் கால சுப்ரமண்யம் ஒரு பதிவினைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘எழுத்தாளர்களைப் பற்றிய வழக்கமான விவரணப்படத்திலிருந்து இது முற்றிலும் புதிய கோணத்தில் அமையவுள்ளது. அம்பாசமுத்திரம் குருவனத்தில் பிரமிளின் சிலையை சிற்பி சந்துரு வடிவமைக்க இருக்கிறார். அதுவும் படமாக்கப் பட உள்ளது.’ எனக் கூறியுள்ளார். இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் மே முதல் வாரத்தில் கரடிகுடியில் மாபெரும் விழா ஒன்று நடக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

வெற்றிமாறனும் இலக்கியமும்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் வெற்றிமாறன் தனது படங்களுக்கான கதைகளை தமிழ் இலக்கியங்களில் இருந்து எடுத்தாண்டு வருகிறார். அவரின் விசாரணை, அசுரன், விடுதலை மற்றும் விரைவில் உருவாக உள்ள வாடிவாசல் ஆகிய சமீபத்தைய படைப்புகள் தமிழ் இலக்கியப் படைப்புகளை தழுவி உருவாக்கப்பட்டவை. தொடர்ந்து இலக்கிய படைப்புகளை தனது படங்களில் பயன்படுத்தி வரும் வெற்றிமாறன், தலைசிறந்த கவிஞர் ஒருவரின் ஆவணப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran Thangam join hands pramil documentary film

People looking for online information on Doccumentary, Pramil, Thangam, Vetrimaaran will find this news story useful.