“வாடிவாசல்-க்காக சூர்யா இந்த HOME WORK-லாம்…” விருது மேடையில் சீக்ரெட் சொன்ன வெற்றிமாறன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் குறித்து பிரத்யேகமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | மன்னர் வேடத்தில் அக்ஷய் குமார் நடித்த ‘சாம்ராட் பிரித்விராஜ்’… பிரபல ஓடிடியில் ரிலீஸ்

BGM 8

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி கடந்த மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர். இது சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வெற்றிமாறனுக்கு விருது

இந்த விழாவில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றிமாறனுக்கு “Director of the Decade” என்ற விருது அளிக்கப்பட்டது. இதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வழங்கினார். அப்போது இயக்குனர் வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் மிஷ்கின் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பேசிய வீடியோ ஒளிபரப்பானது.

வாடிவாசல் Update

விருதுபெற்ற வெற்றிமாறனிடம் அவர் இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான வாடிவாசல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெற்றிமாறன் “அந்த படம் மிகவும் தொடக்க நிலையில்தான் உள்ளது. இரண்டு நாட்கள் டெஸ்ட் ஷூட் நடத்தினோம். அந்த படம் எவ்வளவு சவாலாக இருக்கப் போகிறது என்பது அதில் தெரிந்தது. இந்த படத்துக்கா சூர்யா சார் இரண்டு காளைகள் வாங்கி வீட்டிலேயே வளர்த்து பழகி வருகிறார். அதுமட்டுமில்லாமல் மாடுபிடி வீரர்களோடும் பழகி வருகிறார். அந்த காளைகள்தான் சூர்யாவோடு நடிக்க உள்ளன.” எனக் கூறினார்.  வாடிவாசல் திரைப்படம் சி சு செல்லப்பா எழுதிய தமிழ் கிளாசிக் நாவலான வாடிவாசலை தழுவி உருவாக்கப்பட உள்ளது.

Also Read | “இது என் close friend சார்…” ராக்கெட்ரி ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா… கட்டியணைத்து வரவேற்ற Maddy

“வாடிவாசல்-க்காக சூர்யா இந்த HOME WORK-லாம்…” விருது மேடையில் சீக்ரெட் சொன்ன வெற்றிமாறன் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran talked about suriya homeworks for vaadivasal

People looking for online information on Behindwoods Gold Medals Awards 2022, BGM 8, Suriya, Vaadivasal Movie updates, Vetrimaaran will find this news story useful.