சென்னை: வாடிவாசல் படத்தில் பிரபல வில்லன நடிகர் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் "சி சு செல்லப்பா" அவர்கள் எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.
இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய "அசுரன்" மற்றும் "விசாரணை" படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "விடுதலை" படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே. இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார்.
முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் டைட்டில் லுக் சில நாட்களுக்கு முன் வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றது.
வாடிவாசல் படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூர்வாங்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குநராக இணைந்தார்.
வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன
இந்நிலையில் ஜெய்பீம் படத்தில் வில்லன் நடிகர், டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் அரசன் தனது முகநூல் பக்கத்தில் வாடிவாசல் படத்தில் இணைந்தது பற்றி அறிவித்துள்ளார். "அண்ணன் வெற்றிமாறனின் வாடிவாசல் பணிகள் தொடங்கியது களத்தில் தம்பிகள் நாங்கள்..." என அறிவித்துள்ளார். படத்தின் BTS புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இவர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முக்கிய கேரக்டரில் நடிப்பதுடன், இயக்குநர் டீமில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.