வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் ஷூட்டிங் இந்த ஊர்லயா? கௌதம் மேனனுக்கு என்ன ரோல்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் படம் “விடுதலை”.

Vetrimaaran Soori Viduthalai Movie Latest Update

இந்த படத்திற்கு வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப்படத்தை RS Infotainment சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே கோ, கவண் போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vetrimaaran Soori Viduthalai Movie Latest Update

இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படம் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நக்சலைட்டாகவும், சூரி போலிசாகவும் நடிக்கிறார்கள். இயக்குனர் கௌதம் மேனனும் இந்த படத்தில் போலிசாக நடிக்கிறார். 

விடுதலை படத்தின் முக்கிய முதற்கட்ட படப்பிடிப்புகள் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது.  பின் இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதிகளில் நடந்தது. செப்டம்பர் முதல் வாரம் முதல் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் சிறுமலை பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.

பின் சிறுமலை படப்பிடிப்பை படக்குழு (19.09.2021) அன்று நிறைவு செய்தது. மேலும் 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு பாக்கி உள்ளதாகவும், இந்த மீதி படப்பிடிப்பை நடப்பு அக்டோபரில் (11.10.2021) தேதி முதல் கடலூர் மாவட்டம் பன்ருட்டியில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படப்பிடிப்பு குறுகிய கால படப்பிடிப்பாகும்.

விடுதலை படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் பணியாற்ற உள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran Soori Viduthalai Movie Latest Update

People looking for online information on Gautham Vasudev Menon, Ilaiyaraaja, Soori, Vetrimaaran, Vijay Sethupathi will find this news story useful.