விடுதலை : சண்டைக் காட்சி SHOOT -ல் கை முறிந்ததா..? - ரசிகர்கள் மெச்சும் சூரியின் மெனக்கெடல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Viduthalai : “கோவத்துல கன்னா பின்னானு கத்துவேன்.. என்னுடைய இயலாமை.!” மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்.!

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது வெளியாகியுள்ள விடுதலை படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் படை தலைவராக வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பழங்குடியின மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பாத்திரமாக விஜய் சேதுபதி கதாபாத்திரம் அமைந்துள்ளது. கடைநிலை காவலராக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார். பழங்குடியின போலீஸாக வாத்தியாரை பிடிக்க முனைப்பு காட்டும் போலீசாக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார். மிரட்டலான இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இதில் பேசிய இப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தம்முடைய தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், விளம்பர போஸ்டர் வடிவமைப்பாளர் ப்ரொடக்ஷன் மேனேஜர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி பேசியதுடன், இசைஞானி இளையராஜாவுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் பேசினார். தொடர்ந்து பேசியவர் இப்படத்தின் சண்டைக்காட்சிகளில் பணிபுரிந்த மாஸ்டர்கள் பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண்ட் சிவா ஆகியோருக்கு நன்றி சொன்னார்.

அதுபற்றி பேசும்போது, “விடுதலை படத்தின் முதல் பாகத்தின் முடிவில் வரும் டிரெய்ன் Sequence-ஐ மிகவும் ஸ்பெஷலாக பண்ணியிருக்கார். இதில் நடிகர் சூரிக்கு இடது கை சிறிய அளவில் முறிந்து காயம் உண்டானது. அவ்வளவு கஷ்டப்பட்டார். அது ஒரு பெரிய அத்தியாயம்.” என தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லரில் சூரி ஆக்‌ஷன் காட்சிகளுக்காக செய்த அர்ப்பணிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Also Read | Vetrimaaran : "இதுக்காக தான் இளையராஜா Sir சீக்ரமா பேசிட்டு போனார்.!" — விடுதலை இசைவிழாவில் வெற்றிமாறன்.!

விடுதலை : சண்டைக் காட்சி SHOOT -ல் கை முறிந்ததா..? - ரசிகர்கள் மெச்சும் சூரியின் மெனக்கெடல்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran reveals soori injury in viduthalai audio launch

People looking for online information on Vetrimaaran, Viduthalai will find this news story useful.