வெற்றிமாறன் எழுத்தில் லாரன்ஸின் புதிய படம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் தான் S.கதிரேசன்.

Advertising
>
Advertising

Also Read | தளபதி விஜய்க்கு பிடித்த உணவு சமைத்து.. போனில் பேசிய ஷோபா சந்திரசேகர்! நெகிழ்ச்சி வீடியோ

இதில் 'ஆடுகளம்' திரைப்படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றது.  இதேபோல், 'உதயம்', 'காக்காமுட்டை', 'விசாரணை', 'வட சென்னை' உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தது வெற்றிமாறனின், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம்.

இதில் 'காக்கா முட்டை' தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. 'விசாரணை' தேசிய விருது பெற்றதுடன் அகடமி விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படமாகத் தேர்வானது.

வெற்றிமாறன் மற்றும் பைவ் ஸ்டார் கதிரேசன்  தயாரிப்பில் வெற்றிமாறனின் கதை,வசனம், திரைக்கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதுப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும், இரண்டாம் பார்வை போஸ்டரும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தில் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தமிழ்வேல் எனும் இளைஞராக ராகவாலாரன்ஸ் நடிக்கிறார். வேலைக்காக மலேசியா-சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த தமிழக கூலித்தொழிலாளிகள் படும் இன்னல்களை இந்தப்படம் பேசும் என அவதானிக்கப்படுகிறது.

இந்த படத்தை எதிர் நீச்சல், கொடி, பட்டாஸ் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பிரபல   இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  ஏற்கனவே லாரன்சின் காஞ்சனா - 3 படத்திற்க்கு தமன் தான் பின்னணி இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து ஆலோசிக்க வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் - கதிரேசன் - துரை செந்தில் சமீபத்தில் சந்தித்தனர். இந்நிலையில் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படம் குறித்த தகவல்களை தயாரிப்பாளர் கதிரேசன் வெளியிட்டுள்ளார்.

அதில், ""எங்கள் படமான அதிகாரம் கைவிடப்படுவதைப் பற்றி பரவும் வதந்திகளைக் கவனிப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரம் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் மற்றும் படப்பிடிப்புத் திட்டங்கள் சுமூகமாக நடந்து வருவதாக நாங்கள் உறுதியாக அறிவிக்கிறோம்". என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | Making Glimpse வீடியோவுக்கு பிறகு.. ஜெயிலர் படம் பத்தி வெளியான அதிரடி அப்டேட்!!

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran Raghava Lawrance Athigaaram Movie update

People looking for online information on Athigaaram, Athigaaram Movie, Athigaaram Movie update, Raghava Lawrence, Vetrimaaran will find this news story useful.