இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படடத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்த படம் ஓடிடி ரிலீஸாக வெளியாக உள்ளது.

Also Read | “JD ரிலீஸாகி அமைதியா வாழ்ந்தா…” ‘வாரிசு’ போஸ்டருக்கு சூப்பர் கேப்ஷன் கொடுத்த இயக்குனர்
ஆண்ட்ரியா…
கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அதற்கு முன்னர் சில படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருந்த ஆண்ட்ரியா சில நடிகைகளுக்கு பின்னணிக் குரலும் கொடுத்துள்ளர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பிலும் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஆண்ட்ரியா. அவர் நடித்த தரமணி மற்றும் வட சென்னை உள்ளிட்ட படங்கள் அவருக்கு கூடுதல் பாராட்டுகளை பெற்றுத் தந்தன.
சமீபத்தில் 'மாஸ்டர்' மற்றும் 'அரண்மனை 3' ஆகிய படங்களில் தோன்றி இருந்த நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக பிசாசு 2, நோ என்ட்ரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிசாசு 2 திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றன. பிசாசு 2 திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனல் மேலே பனித்துளி…
இந்நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அனல் மேலே பனித்துளி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த படம் நேரடி ஓடிடி வெளியீடாக சோனி லைவ் தளத்தில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல் சிங்கிள்…
இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீடு பற்றிய பாடல் தற்போது வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 24 ஆம் தேதி சந்தோஷ் நாராயணன் இசையில் இனிமையான மெலடி சிங்கிள் வெளியாகும் எனப் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
Also Read | “ஷங்கர் சாரோடு அற்புதமான பயணம்…” ‘RC 15’ படத்தின் Exciting அப்டேட் கொடுத்த தமன்