சோகத்தில் ஆழ்த்திய மரணம்!!.. 3 தேசிய விருது.. 6 மாநில விருது..! யார் இந்த நடிகர் 'நெடுமுடி வேணு'?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்த நடிகர் நெடுமுடி வேணு காலமானார்.

70கள் வரை நாடகங்களில் நடித்து, பின்னர் 1978-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி, 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர். 3 தேசிய விருதுகள் மற்றும் 6 மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

தமிழில், 'இந்தியன்', 'அந்நியன்', 'பொய் சொல்லப் போறோம்', 'சர்வம் தாளமயம்' உட்பட பல படங்களில் நடித்த நெடுடி வேணு, இயக்குநர் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்திலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 73 வயதான நெடுமுடி வேணு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உடல்நலம் சரியில்லாமல் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (திங்கள் கிழமை) காலமானார். 

இவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல தேசிய விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரெசூல் பூக்குட்டி தம் இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

சோகத்தில் ஆழ்த்திய மரணம்!!.. 3 தேசிய விருது.. 6 மாநில விருது..! யார் இந்த நடிகர் 'நெடுமுடி வேணு'? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Veteran Sounth indian Actor Nedumudi Venu passes away

People looking for online information on Actor, RIPNedumudiVenu will find this news story useful.