பிகில் தயாரிப்பாளர்களின் அடுத்த படத்துல ஹீரோ இந்த இயக்குனரா? வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் வகைமையில் வெளியான பிகில்  படத்தில் நயன்தாரா, அமிர்த அய்யர், வர்ஷா பொல்லம்மா, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அட்லி இயக்கி இருந்தார். A. R. ரகுமான் இசையமைத்திருந்தார். 

இந்த திரைப்படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்டது , 'பிகில்' வெளியானதிலிருந்து, சினிமா ரசிகர்கள்  AGS நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பை எதி நோக்கி இருந்தனர். சில தினங்களுக்கு முன் ஏஜிஎஸ் தயாரிப்பாளர்கள் தங்களின் அடுத்த அறிவிப்பை வெளியிட்டனர்.

‘நாய் சேகர்’ எனும் படத்தை நடிகர் சதீஷை வைத்து எடுப்பதாக அறிவித்தனர். சதிஷ் உடன் குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி நடிக்கிறார். சில நாட்களுக்கு முன் நாய் சேகர் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. 

இப்போது, ​​AGS தயாரிப்பாளர்கள் தங்கள் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் முதன்முறையாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, யோகி பாபு மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான நகைச்சுவை பொழுதுபோக்கு படமான ' கோமாளி ' படத்தை இயக்கினார்.

இந்த படம் பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டிவிட்டரில் " பல கதைகளை கேட்ட பிறகு இந்த கதையை தேர்வு செய்ததாகவும், இந்த படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதனை அறிமுகபடுத்துவதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர்.

AGS நிறுவனத்தின் 22வது படமாக இந்த படம் உருவாகிறது.

Tags : Bigil, Comali, Ags

தொடர்புடைய இணைப்புகள்

VERITHANAM BIGIL MAKERS OFFICIALLY ANNOUNCE THEIR NEXT

People looking for online information on Ags, Bigil, Comali will find this news story useful.